Our Feeds


Sunday, May 31, 2026

SHAHNI RAMEES

சவுதி அரேபியாவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ACJU செயலாளர் அஷ்ஷெய்க் அர்க்கம் இலங்கை திரும்பினார்.

 


சவுதி அரேபியாவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட

ACJU செயலாளர் அஷ்ஷெய்க் அர்க்கம் இலங்கை திரும்பினார். 


சவுதி அரேபியாவுக்கு புனித ஹஜ் கடமைக்கு வழிகாட்டியாக சென்ற ஜம்இய்யதுல் உலமா சபையின் செயலாளர் அஷ்ஷெய்க் அர்க்கம் நூராமித் அவர்கள், சவுதி அரேபிய பிரஜா  உரிமை பெற்ற இலங்கையர் ஒருவர் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கு அமைய அங்கு கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் சவுதி அரேபியாவுக்கான இலங்கை தூதரகம் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சின் உடனடி முயற்சியின் பின் சவுதியிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளார். 


இன்று காலை சவுதி அரேபியாவின் ஜித்தா விமான நிலையம் ஊடாக அஷ்ஷெய்க் அர்க்கம் நூராமித் இலங்கை பயணமாகியுள்ளதாக அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »