Our Feeds


Saturday, May 2, 2026

Zameera

மரத்தில் இருந்து விழுந்து ஒருவர் பலி


 யாழ்ப்பாணத்தில் நேற்று (01) கறிவேப்பிலை பறிப்பதற்காக மரத்தில் ஏறியவர் தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். 


 


காங்கேசன்துறை வீதி, நாச்சிமார் கோவிலடியை சேர்ந்த 64 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 


குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், 


குறித்த நபர் கறிவேப்பிலை பறிப்பதற்கு சென்று மரத்தில் ஏறியபோது தவறி கீழே விழுந்து மயக்கமுற்றுள்ளார். இதன்போது வீதியால் சென்றவர்கள் அவரது மனைவிக்கு தகவல் தெரிவித்தனர். 


அதன்பின்னர் அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 


அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொ


-யாழ். நிருபர் கஜிந்தன்-

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »