Our Feeds


Monday, May 4, 2026

Zameera

ஹக்கிம், காரியப்பரின் மனு விசாரணையின்றி நிராகரிப்பு


 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் அதன் பொதுச்செயலாளர் நிஸாம் காரியப்பர் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது நிராகரிப்பதாக உயர் நீதிமன்றம் இன்று (04) அறிவித்துள்ளது. 


தங்கள் இருவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள் என்பதை பாராளுமன்றத்திற்கு அறிவிக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவிற்கு உத்தரவிடுமாறு கோரி அவர்கள் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். 


முன்வைக்கப்பட்ட இந்த மனுவைப் பரிசீலித்த உயர் நீதிமன்றம், அதனைத் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது நிராகரிப்பதற்கு தீர்மானித்தது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »