Our Feeds


Friday, May 1, 2026

Zameera

மலையக மக்களின் நம்பிக்கையை பாதுகாப்பேன் - ஜனாதிபதி


 மலையக மக்கள் தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையை எந்த நிலையிலும் பாதுகாப்பேன் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


நுவரெலியாவில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, வடக்கு மற்றும் கிழக்கு மக்களும் தற்போதைய அரசாங்கத்தின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.


“மக்களோடு மக்களாக இருப்பதால்தான் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடிந்தது” என ஜனாதிபதி தெரிவித்தார். உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் தொழிற்துறைகளுக்கு அரசாங்கம் உடனடி நிவாரணம் வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இது மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை எனவும் அவர் குறிப்பிட்டார்.


மக்கள் வழங்கிய நம்பிக்கையே அரசாங்கத்தின் பலமாக இருப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, அந்த நம்பிக்கையை நிலைநிறுத்தும் வகையில் மக்கள் நலக் கொள்கைகள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »