ஈரானின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருகின்றது. ஈரானியர்களால் மசகு எண்ணெயிலிருந்து எந்த வருமானமும் பார்க்க முடியவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வொஷிங்டனிலுள்ள வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறியதாவது: ஈரானின் இராணுவம் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டது. ட்ரோன் தொழிற்சாலைகள் 82 சதவீதம் செயலிழந்துள்ளன.
ஈரான் ஒப்பந்தம் செய்ய ஆர்வமாய் இருக்கின்றது. பேச்சு வார்த்தைகளின் தற்போதைய உண்மையான நிலவரம் ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். ஈரானின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருகின்றது.
ஈரானின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வருகின்றது. ஈரானியர்களால் மசகு எண்ணெயிலிருந்து எந்த வருமானமும் பார்க்க முடியவில்லை. ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்க அனுமதிக்க முடியாது. போராட்டம் நடத்தியதற்காக, ஆயுதம் ஏந்தாத 42,000 அப்பாவி மக்களை அவர்கள் கொன்றிருக்கிறார்கள்.
ஆனால், அவர்கள் சொல்லும் எண்ணிக்கை அதைவிட மிக அதிகம். ஈரானுடனான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு ஜனாதிபதி ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
