Our Feeds


Tuesday, May 19, 2026

Zameera

வெள்ளத்துக்கு பின் நீர்வழி நோய்கள் பரவும் அபாயம்


 மழையுடனான காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள சிறியளவிலான வெள்ளப்பெருக்குகளுக்குப் பின்னர், நீர் மூலம் பரவும் நோய்கள் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

டெங்கு, எலிக்காய்ச்சல், மஞ்சள்காமாலை மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் அடுத்த இரண்டு வாரங்களில் அதிகரிக்கக்கூடும் என சிரேஷ்ட ஆலோசகர் மருத்துவ நிபுணர் மருத்துவர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

வெள்ளநீர் மற்றும் மாசடைந்த குடிநீர் மூலம் நோய்கள் பரவக்கூடும் என்பதால், கொதிக்கவைத்து ஆறவைக்கப்பட்ட அல்லது சுத்திகரிக்கப்பட்ட நீரை மட்டுமே பருக வேண்டும் என்றும், சேற்று நீரில் நடப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் பொதுமக்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »