Our Feeds


Thursday, May 7, 2026

Zameera

பலத்த மின்னல் குறித்த எச்சரிக்கை


 வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தங்கள் பற்றிய முன்கூட்டிய எச்சரிக்கை மையத்தினால் இன்று இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் வகையில் பலத்த மின்னல் குறித்த எச்சரிக்கை அறிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, வடமேல், தெற்கு, மேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் வவுனியா மாவட்டத்திலும் சில இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் குறித்த பிரதேசங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துகளைக் குறைத்துக்கொள்வதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »