இந்தக் கட்டணத் திருத்தத்தை ஒரு குறிப்பிட்ட சதவீதமாக அதிகரிக்காமல், பெற்றோருடன் கலந்துரையாடி ஓரளவுக்கு உயர்த்துவதற்கு எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார். இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் டீசல் விலை உயர்த்தப்பட்ட போதும், பெற்றோரின் நிலையைக் கருத்திற்கொண்டு போக்குவரத்து கட்டணங்களை அதிகரிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
எனினும், தற்போது ஏற்பட்டுள்ள சிரமங்களைக் கருத்திற்கொண்டு இம்முறை ஒரு குறிப்பிட்ட தொகையினால் கட்டணத்தை அதிகரிக்க நேரிடும் என செயலாளர் மேலும் தெரிவித்தார்.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த அகில இலங்கை பாடசாலைப் போக்குவரத்துச் சங்கத்தின் செயலாளர் மல்ஸ்ரீ டி சில்வா
"நேற்று நள்ளிரவு முதல் டீசல் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு காலமும் பெற்றோருக்கு சுமையாக இருக்கக்கூடாது என்பதற்காகவே இதனை முன்னெடுத்துச் சென்றோம். ஆனால் இப்போது கட்டணத்தை அதிகரிக்க வேண்டியுள்ளது. இதனை ஒரு சதவீதமாகக் கூறாமல், பெற்றோருக்கு சுமையாக அமையாத வகையில் டீசல் விலை அதிகரிப்புக்கு ஏற்ப உயர்த்துமாறு கோருகிறோம். மிகவும் சிரமத்துடனேயே இந்தத் தொழிலைச் செய்து வருகிறோம். பலமுறை டீசல் விலை அதிகரித்தமையால், இந்த சந்தர்ப்பத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையினால் கட்டணத்தை அதிகரிக்க வேண்டியுள்ளது."
