Our Feeds


Saturday, May 23, 2026

Zameera

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிப்போருக்கான விசேட அறிவுறுத்தல்


 நாட்டில் நிலவும் பலத்த மழையால் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது.

மின்னணு எச்சரிக்கை பலகைகளில் உள்ள அறிவுறுத்தல்களை கவனித்து முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்தவாறு பயணிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், மணிக்கு 60 கிலோமீற்றருக்கும் குறைவான வேகத்தில் பயணிக்கவும், வாகனங்களுக்கு இடையில் பாதுகாப்பான இடைவெளியை பேணவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நனைந்த வீதிகளில் திடீர் பிரேக் போடும்போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், பொறுமையுடனும் அவதானத்துடனும் பயணிக்குமாறு அதிகார சபை வலியுறுத்தியுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »