2023/2024 ஆம் ஆண்டுகளுக்குரிய ஆசிரியர் கலாசாலை இறுதிப் பரீட்சைகள் நாளை (11) ஆரம்பமாகவுள்ளன.
செய்முறைப் பரீட்சை உள்ளடங்கலாக, எதிர்வரும் 17 ஆம் திகதி வரை மூன்று பரீட்சை மையங்களில் இந்தப் பரீட்சைகளை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் ஏற்கனவே அந்தந்த ஆசிரியர் கலாசாலைகளுக்குத் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk ஊடாகவும் இந்த அனுமதி அட்டைகளைத் தரவிறக்கம் செய்துகொள்வதற்கான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
