Our Feeds


Wednesday, May 13, 2026

Zameera

எதிர்க்கட்சியின் திறமையானவர்களை இணைத்துக்கொள்ள NPP அரசாங்கம் தயார்


வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் வசந்த சமரசிங்க


நாட்டின் முன்னேற்றத்திற்காக எதிர்க்கட்சியில் உள்ள திறமையான நபர்களையும் இணைத்துக்கொள்ள மாலிமா அரசாங்கம் தயாராக இருப்பதாக வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.


கபில சந்திரசேனவின் மரணம் குறித்து எதிர்க்கட்சிக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், விசாரணைகளுக்குத் தேவையான தகவல்களை வழங்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

நேற்று (10) அனுராதபுரத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.


மரணம் தொடர்பான முக்கியமான சாட்சிகள் அல்லது தகவல்கள் தெரிந்தால் அவற்றை விசாரணைப் பிரிவினரிடம் உடனடியாக வெளிப்படுத்துமாறு அவர் எதிர்க்கட்சியிடம் கோரிக்கை விடுத்தார். இந்த மரணம் குறித்து அரசாங்கம் என்ற ரீதியில் தேவையான உதவிகளை வழங்குவதைப் போன்றே, சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களும் முறையான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.


மின்சாரக் கட்டண அதிகரிப்பு என்பது இலங்கையில் மாத்திரமன்றி ஏனைய நாடுகளிலும் இடம்பெறுவதாகவும், அதனைத் தணிப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். நாட்டில் உள்ள அறிவார்ந்த மக்களைக் கொண்டு அரசாங்கம் கட்டமைக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க எதிர்க்கட்சியில் உள்ள திறமையானவர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள மாலிமா அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »