த.வெ.க. மூத்த நிர்வாகி ஆதவ் அர்ஜுனா,
இன்று வி.சி.க. தலைவர் திருமாவளவனை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது த.வெ.க.வுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கடிதம் வழங்கப்பட்டது. கடிதத்தை பெற்றுக் கொண்டு வெளியே வந்த ஆதவ் அர்ஜுனா, செய்தியாளர்களிடம் பேசுகையில், “வெற்றி, வெற்றி, வெற்றி. தோழமை கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், வி.சி.க. அனைவருக்கும் நன்றி. ஜனநாயகம் காக்கப்படும். த.வெ.க. தலைவர் விஜய் தமிழகத்தின் முதல்-அமைச்சராக பதவியேற்பார்” என்று தெரிவித்தார்.இதன் மூலம் த.வெ.க. தலைவர் விஜய்க்கு பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவு தற்போது கிடைத்துள்ளது. தொடர்ந்து கவர்னரை சந்தித்து ஆதரவு எண்ணிக்கையை காண்பித்து ஆட்சியமைப்பதற்கான உரிமையை கோர உள்ளார். கவர்னர் ஆட்சியமைக்க அழைக்கும் பட்சத்தில் விஜய் தமிழகத்தின் முதல்-அமைச்சராக பதவியேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
