Our Feeds


Tuesday, June 9, 2026

Admin

அவசரகால சட்டத்தை நீடிக்கும் தீர்மானம் 128 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!


அவசரகால சட்டத்தை நீடிக்கும் தீர்மானம் 128 மேலதிக வாக்குகளால் இன்று (9) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 135 வாக்குகளும், எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளது.

அவசரகால சட்டம் 128 மேலதிக வாக்குகளினால் நீடிக்கப்பட்டது. பாராளுமன்றத்தில்  செவ்வாய்க்கிழமை அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதம் இடம்பெற்றது.

விவாதத்தின் முடிவில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான யாழ் மாவட்ட எம்.பி. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வாக்கெடுப்புக்கோரினார்.

இதனையடுத்து இடம்பெற்ற வாக்கெடுப்பில் அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதகாலத்துக்கு நீடிப்பதற்கு ஆதரவாக 135வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியோடு இணைந்து தமிழரசுக்கட்சியும் எதிராக வாக்களித்தது. அதனடிப்படையில் அவசரகால சட்ட நீடிப்பு 128 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

இந்த வாக்கெடுப்பில் 82 எம்.பி.க்கள் பங்கேற்கவில்லை.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »