Our Feeds


Tuesday, June 16, 2026

Zameera

14 நாட்களில் 54,465 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை


 ஜூன் மாதத்தின் முதல் 14 நாட்களுக்குள் 54,465 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

வெளியிடப்பட்டுள்ள புதிய தரவுகளின்படி, இக்காலப்பகுதியில் இந்தியாவில் இருந்து மட்டும் 21,839 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இது மொத்த வருகையாளர்கள் எண்ணிக்கையில் 42% ஆகும்.

மேலும், இந்தக் காலகட்டத்தில் சீனாவிலிருந்து 3,503 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 4,160 பேரும், அவுஸ்திரேலியாவிலிருந்து 3,105 பேரும் இலங்கைக்கு வந்துள்ளனர்.

மேலும், 2026 ஜனவரி 01 முதல் ஜூன் 14 வரையிலான காலகட்டத்தில் சுற்றுலாப் பயணிகளின் மொத்த வருகை 1,076,487 எனப் பதிவாகியுள்ளது.

இவர்களில், இந்தியாவிலிருந்து 272,099 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 76,686 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 102,253 பேரும் வந்துள்ளனர் என அதிகாரசபை தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »