யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் இடம்பெற்ற கொடூர விபத்தில் 21 வயதுடைய இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அச்சுவேலி, பாரதி வீதியைச் சேர்ந்த குறித்த இளைஞன், தனது சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக பண்ணை வீதியில் வாகனப் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
வாகனப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்துவிட்டு, அவர் வாகனத்திலிருந்து வீதியில் இறங்கிய துரதிர்ஷ்டவசமான கணத்தில், பின்னால் அதிவேகமாக வந்த லொறி ஒன்று அவர் மீது மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிர் பிரிந்துள்ளார். இச்சம்பவம் குறித்து யாழ்ப்பாணப் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
