முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார, மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CCIB) கைது செய்யப்பட்டுள்ளார்.
இரண்டு அரச நிறுவனங்களில் ஒரே நேரத்தில் ஊதியம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளின் அடிப்படையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
