Our Feeds


Friday, June 26, 2026

Zameera

ஞானசார தேரரின் வழக்கு ஜூலை 31க்கு ஒத்திவைப்பு


 இஸ்லாமிய மதத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, ஜூலை 31-ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


இந்த வழக்கை விசாரிக்கும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி.ராகல இன்று (26) கடமை நிமித்தம் விடுமுறையில் இருந்ததனால், வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. 


அங்கு நீதிபதி, இந்த வழக்கை முன் - விசாரணை மாநாட்டிற்காக ஜூலை 31-ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உத்தரவிட்டார். 


வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பிரதிவாதியான ஞானசார தேரர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார். 


இஸ்லாமிய மதத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதன் மூலம் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை மீறும் வகையில் செயற்பட்டதாகக் குற்றம் சாட்டியே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »