Our Feeds


Tuesday, June 16, 2026

Zameera

யோஷிதவின் மனு : ஜூலை 3ஆம் திகதி தீர்ப்பு


 பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் தனக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், 'சதித்திட்டம்' என்ற குற்றச்சாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என தீர்ப்பளிக்குமாறு கோரி யோஷித ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை நிறைவடைந்துள்ளதுடன், அதன் உத்தரவை ஜூலை மாதம் 03 ஆம் திகதி அறிவிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. 


இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மனுதாரரான யோஷித ராஜபக்ஷ சார்பில் சட்டத்தரணி ஹபீல் பாரிஸ் சமர்ப்பணங்களை முன்வைத்ததுடன், சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார சமர்ப்பணங்களை முன்வைத்தார். 


இதனையடுத்து, விசாரணைகளை நிறைவு செய்த அமல் ரணராஜா மற்றும் கலாநிதி சுமுது பிரேமச்சந்திர ஆகியோரைக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »