Our Feeds


Tuesday, June 23, 2026

Admin

47,500ஐத் தாண்டிய டெங்கு நோயாளர்கள் - 29 பேர் உயிரிழப்பு!


இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 47,530 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.

தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு நேற்று (22) நள்ளிரவு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஜூன் மாதத்தில் மாத்திரம் 13,689 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதேவேளை, மொத்த டெங்கு நோயாளர்களில் 51.90 சதவீதமானோர் மேல் மாகாணத்திலும், 16.18 சதவீதமானோர் தென் மாகாணத்திலும் பதிவாகியுள்ளனர்.

டெங்கு பரவும் அதிக அவதானம் மிக்க 112 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளன.

தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, கொழும்பு மாவட்டத்தில் 9,983 நோயாளர்களும், கம்பஹாவில் 8,809 நோயாளர்களும், மாத்தறை மாவட்டத்தில் 3,446 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »