Our Feeds


Tuesday, June 16, 2026

Zameera

அமெரிக்க B-52 போர் விமானம் விபத்து: 8 பேர் பலி




 லொஸ் ஏஞ்சல்ஸுக்கு வடக்கில் அமைந்துள்ள எட்வர்ட்ஸ் விமானப்படை தளத்தில் அமெரிக்க இராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. 


அமெரிக்க நேரப்படி காலை 11:20 மணி அளவில் எட்வர்ட்ஸ் விமான தளத்தில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அமெரிக்க விமானப் படையின் B-52 ஸ்ட்ராடோஃபோர்ட்ரஸ் (Stratofortress) ரக விமானம் விபத்துக்குள்ளானது மேலும் தெரிவிக்கப்படுகின்றது. 


அவசரக்கால மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 


இந்த அசம்பாவிதத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


B-52 என்பது 1950 கள் முதல் அமெரிக்க விமானப்படையில் சேவையில் உள்ள நீண்ட தூர உத்திசார் குண்டுவீச்சு விமானமாகும். 8,800 மைல்கள் வரை சென்று தாக்கும் திறன் கொண்ட இந்த விமானம், அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது. 


வியட்நாம், வளைகுடாப் பகுதி, ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் மிகச் சமீபத்தில் ஈரான் ஆகிய இடங்களில் நடந்த மோதல்கள் உட்பட பல இராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்கா இந்த ரக குண்டுவீச்சு விமானத்தைப் பயன்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »