Our Feeds


Tuesday, June 23, 2026

Zameera

நெல் கொள்வனவு மற்றும் விலையை அதிகரிக்குமாறு கோரி விவசாயிகள் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டப் பேரணி


 நெல் கொள்வனவு மற்றும் விலையை அதிகரிக்குமாறு கோரி விவசாயிகள் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியில் இன்று (23) காலை ஈடுபட்டுள்ளனர். 


ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ள விவசாயிகள் நெல்லுக்கான நியாயமான விலை கிடைக்க வேண்டும், நெல் சந்தைப்படுத்தல் சபை ஊடாக நெல் கொள்வனவு செய்யப்படவேண்டும், விவசாய இரசாயனங்கள் நியாயமான விலையில் கிடைக்கவேண்டும், அரிசி இறக்குமதியை உடனடியாக நிறுத்தவேண்டும் முதலான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »