Our Feeds


Monday, June 22, 2026

Zameera

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது



இணையவழி பணப் பரிமாற்ற முறைகள் மூலம் வங்கித் கணக்குகளுக்குப் பணத்தைப் பெற்றுக்கொண்டு, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த இரண்டு சந்தேக நபர்கள் நீர்கொழும்பு, கட்டுவ பகுதியில் போதைப்பொருட்களுடன் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 


இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கல்கிசை மற்றும் உடுகம்பொல பகுதிகளைச் சேர்ந்த 29 மற்றும் 31 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது. 


நீர்கொழும்பு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் குழுவினர் முன்னெடுத்த விசாரணையின் போது கிடைத்த தகவலுக்கு அமைவாக இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளது. 


இதன்போது, சந்தேக நபர்களிடமிருந்து 1 கிலோகிராம் 34 கிராம் ஹேஷ்​ போதைப்பொருள், 7 கிராம் 420 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 8 கிராம் 860 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் ஆகியவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 


இவற்றுக்கு மேலதிகமாக, போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 351,200 ரூபாய் பணமும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு கார்களும் பொலிஸாரால் கண்டறியப்பட்டுள்ளன. 


நீர்கொழும்பு பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »