ஆசனப்பட்டி சட்டம் இன்று (20) முதல் கட்டாயமாக அமுல்படுத்தப்படுவதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை அறிவித்துள்ளது.
இதற்கமைய, வாகனங்களை ஓட்டும் சாரதி மற்றும் முன் இருக்கை பயணிகள் மட்டுமன்றி, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த வழங்கப்பட்ட சலுகைக்காலம் நேற்றுடன் (19) நிறைவடைந்த நிலையில், இன்று முதல் நாடு முழுவதும் கட்டாய அமுலாக்கம் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
