Our Feeds


Friday, June 19, 2026

Admin

புனித குர்ஆன் பிரதிகளை விடுவிக்கக் கோரி பாதுகாப்பு அமைச்சுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம் | முஸ்லிம் கலாசார திணைக்கள பணிப்பாளர் தெரிவிப்பு



சவுதி அரேபியாவிலிருந்து அனுப்பப்பட்ட குர்ஆன் பிரதிகள் மீளாய்வுக்குழு உலமாக்களினால் 2 வருடங்களாக தடுக்கப்பட்ட நிலையில் கடந்த வாரம் குர்ஆன் பிரதிகளை விடுவிக்க மீளாய்வுக்குழு அனுமதி கடிதம் வழங்கியதை தொடர்ந்து முஸ்லிம் கலாசார திணைக்களம் சார்பில் பாதுகாப்பு அமைச்சிடம் குர்ஆன் பிரதிகளை விடுவிக்குமாறு கோரி கடிதம் அனுப்பியுள்ளதாக பணிப்பாளர் நவாஸ் தெரிவித்துள்ளார். 


சமூக செயல்பாட்டாளர் சகோதரர் ரஸ்மின் மற்றும் ஊடகவியலாளர் சகோதரர் அப்துர் ரஹ்மான் ஆகியோர் திணைக்களத்திற்கு நேரில் சென்று விசாரித்த போது பணிப்பாளர் அவர்கள் மேற்கண்ட தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். 


இது தொடர்பில் சகோதரர் ரஸ்மின் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ள விரிவான கருத்துக்கள் இதோ.


தடுக்கப்பட்டுள்ள குர்ஆன் பிரதிகளை விடுவிப்பது பற்றிய தொடர் செயல்பாட்டின் அங்கமாக முஸ்லிம் கலாசார திணைக்கள பணிப்பாளர் சகோதரர் நவாஸ் உள்ளிட்ட அதிகாரிகளை நானும் சகோதரர் Mahusooq Abdur Rahman அவர்களும் நேரில் சந்தித்து கலந்துரையாடினோம். 


சுமார் 2 வருடங்களுக்கு மேல் ரிவீவ் கமிட்டி - மீளாய்வுக் குழுவின் பரிந்துரையின் காரணமாக குர்ஆன் பிரதிகள் தடுக்கப்பட்டிருக்கும் நிலையில் மீளாய்வுக் குழு 2 வருடங்களின் பின் கடந்த வாரம் அவற்றை விடுவிக்க தமக்கு ஆட்சேபனை இல்லையென கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அடுத்த கட்டமாக  Department of Muslim Religious and Cultural Affairs - முஸ்லிம் கலாசார திணைக்களம் பாதுகாப்பு அமைச்சு மூலம் அவற்றை விடுவிப்பதற்கான செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பதால் அது தொடர்பில் கலாசார திணைக்களம் எடுத்துள்ள முயற்சிகள் பற்றி பணிப்பாளரிடம் கேட்டோம்.


ரிவீவ் கமிட்டி - மீளாய்வுக்குழு வின் கடிதம் கிடைத்தவுடன் பாதுகாப்பு அமைச்சு மற்றும் புத்தசாசன அமைச்சுகளுக்கு முஸ்லிம் கலாசார திணைக்களம் கடிதம் அனுப்பியுள்ளதாகவும், குர்ஆன் பிரதிகளை விடுவிப்பதற்காக தம்மால் முடிந்த அனைத்து வழிகளிலும் முயற்சிப்பதாகவும் பணிப்பாளர் நவாஸ் மற்றும் அதிகாரிகள் விளக்கமளித்தனர். 


ரிவீவ் கமிட்டி எனும் பெயரில் செயல்பட்ட சில உலமாக்களின் தவறான அனுகுமுறைகளினால் 2 ஆண்டுகளுக்கும் மேலாக தடுக்கப்பட்டுள்ள புனித குர்ஆன் பிரதிகள் விரைவில் விடுவிக்கப்பட வேண்டும் என்பதற்கான எல்லா முயற்சிகளையும் பல தரப்பிலும் செய்து வருகிறோம். இன்ஷா அல்லாஹ் முயற்சி கைகூடி குர்ஆன் பிரதிகள் நம் கரம் சேர அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள் சகோதரர்களே.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »