இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள அண்மைக்கால நாளாந்த நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 337 ரூபா எல்லையைத் தாண்டியுள்ளது.
மத்திய வங்கி இன்று (03) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகித அறிவிப்பின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 328.00 ரூபாவாகவும், விற்பனை விலை 337.97 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இதற்கு மாறாக, நேற்று (02) அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 326.75 ரூபாவாகவும், விற்பனை விலை 336.60 ரூபாவாகவும் இருந்ததாக இலங்கை மத்திய வங்கி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
