Our Feeds


Wednesday, June 17, 2026

Zameera

சிறுவர் பாதுகாப்பை வலுப்படுத்த காத்தான்குடியில் முக்கிய மாநாடு


 இலங்கை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் ஏற்பாட்டில், சிறுவர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த முக்கிய மாநாடு காத்தான்குடி நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்வின் தொடக்கமாக, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் உத்தியோகபூர்வ பதாகை காட்சிப்படுத்தப்பட்டது. இதில் அதிகாரசபையின் இலச்சினையுடன், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை என்ற வாசகம் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் பிரதானமாக இடம்பெற்றிருக்கின்றது.

மேலும், அவசர உதவி மற்றும் தொடர்புகளுக்கான முகவரி, தொலைபேசி எண்கள் (0112778911-14) மற்றும் இணையதள விவரங்களும் இதில் இடம்பெற்றுள்ளது.

​இந்த மாநாட்டில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ் அருள்ராஜ் கலந்து கொண்டார். இதில் பல்வேறு திணைக்களங்களைச் சேர்ந்த அரச அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் கல்வித்துறை சார்ந்த முக்கிய பிரமுகர்கள் சட்டத்தரணிகள் பெருமளவில் கலந்துகொண்டனர்.

சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுத்தல், பாதுகாப்பு மற்றும் தற்போதைய சவால்கள் குறித்து இந்த மாநாட்டில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அதிகாரிகளின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த மாநாடு, எதிர்காலத்தில் சிறுவர் பாதுகாப்பை மேலும் பலப்படுத்துவதற்கான முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »