அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலேவுக்கு எதிராகக் முன்னெடுக்கப்பட்ட கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற நடத்தையைக் கண்டித்து நடத்தப்பட்ட சத்தியாகிரகத்தை தற்காலிகமாக முடிவுக்குக் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த (08) ஆம் திகதி கொழும்பு கோட்டை ரயில் நிலைய வளாகத்தில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சில அரசியல் கட்சிகளினால் இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே, காவலில் இருந்தபோது சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா எனப் பரிசோதித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக 5 பேர் கொண்ட விசேட மனநல தடயவியல் மருத்துவ குழு ஒன்றை கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் நியமித்துள்ளது.
கொழும்பு கோட்டை நீதிவான் பசன் அமரசேனவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த மருத்துவ பரிசோதனையை தெற்கு கொழும்பு போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளுமாறும் அங்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, அந்த மருத்துவ அறிக்கையை அடுத்த வழக்குத் தவணையின் போது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் நீதவானின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
