தென்கிழக்கு ஆசிய போலியோ ஒழிப்பு ஆணைக்குழுவின் 19 வது அமர்வு இன்று (24) ஆரம்பமாகியுள்ளது.
கொழும்பில் இடம்பெற்று வரும் இந்த அமர்வுக்கு சுகாதார பிரதியமைச்சர் ஹன்சக விஜேமுனி தலைமை தாங்குகின்றார்.
இலங்கை, இந்தியா, இந்தோனேசியா, தென்கொரியா, தாய்லாந்து, நேபாளம், மாலைத்தீவு, பூட்டான், பங்களாதேஷ், மியன்மார் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சுமார் 100 நிபுணர்கள் பங்கேற்றுள்ளனர்.
குறித்த அமர்வானது எதிர்வரும் 26 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
