Our Feeds


Sunday, June 21, 2026

Zameera

உலகின் மிகப்பெரிய நிலத்தடி வெப்ப ஏரி கண்டுபிடிப்பு


 தெற்கு அல்பேனியாவில் உள்ள அட்டோமஸ் குகைக்குள் உலகின் மிகப்பெரிய நிலத்தடி வெப்ப ஏரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 'லேக் நியூரோன்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஏரியின் முழுமையான அளவை விஞ்ஞானிகள் 3D ஸ்கேனர்கள் மூலம் தற்போது உறுதி செய்துள்ளனர்.

மேலும், இதை முதன்முதலில் 2021-ல் செக் குடியரசு விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டது. தற்போது அதிநவீன கருவிகள் மூலம் முழுமையாக அளவிடப்பட்டுள்ளது.

இது சுமார் 138.3 மீட்டர் நீளம், 42 மீட்டர் அகலம் மற்றும் 345 மீட்டர் சுற்றளவு கொண்டது. இதன் மொத்த பரப்பளவு 34,450 சதுர அடி, ஆழம் 25 அடி ஆகும்.

அத்துடன் இந்த ஏரியில் 79 டிகிரி வெப்பநிலைக் கொண்ட 8,335 கன மீட்டர் வெப்ப கனிம நீர் உள்ளது. இதில் 2.9 இலட்சம் கன அடி கனிமங்கள் நிறைந்துள்ளன.

எனவே விஞ்ஞானிகள் இந்த ஏரியை ஒரு அசாதாரண இயற்கை அதிசயம் என்று விவரிக்கின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »