Our Feeds


Saturday, June 6, 2026

Admin

NPPயின் இரட்டைமுக அரசியலால் மக்களை ஏமாற்ற முடியாது - நாமல் ராஜபக்ஷ!



தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரட்டைமுக அரசியலால் இனிமேலும் மக்களை ஏமாற்ற முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றை இட்டு, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த உள்ளுராட்சிமன்றத் தேர்தலின் போது, தமது அரசியல் ஆதாயத்துக்காக, விடுதலை புலிகள் அமைப்பினரை தேசிய மக்கள் சக்தி வெளிப்படையாக புகழ்ந்ததாகவும் நாமல் ராஜபக்ஷ குறிப்பட்டுள்ளதார்.

இன்று, அதே அரசாங்கம், விடுதலைப் புலிகள் தொடர்பான உள்ளடக்கம் இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், ஒரு இளம் தமிழ் கலைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், தமிழ் இளைஞர்களும், நமது நாட்டின் அனைத்து இளைஞர்களும் சந்தர்ப்பவாத அரசியலால் தொடர்ந்து தவறாக வழிநடத்தப்படக்கூடாது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ கோரிக்கை விடுத்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »