Our Feeds


Thursday, July 16, 2026

SHAHNI RAMEES

டெங்கு| நேற்று (15) மாத்திரம் 1,195 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்!



இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில்

பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 72,430 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. 


இதன்படி, நேற்று (15) மாத்திரம் 1,195 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 


ஜூலை மாதத்தின் முதல் 15 நாட்களில் மாத்திரம் 17,051 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 


இவர்களில் அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 38,160 ஆகும். 


அத்துடன், தென் மாகாணத்தில் 11,274 நோயாளர்களும், சப்ரகமுவ மாகாணத்தில் 6,073 நோயாளர்களும், மத்திய மாகாணத்தில் 6,026 நோயாளர்களும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது. 


ஜூலை மாதத்தில் கம்பஹா மாவட்டத்தில் 15,082 நோயாளர்களும், கொழும்பு மாவட்டத்தில் 14,447 நோயாளர்களும், மாத்தறை மாவட்டத்தில் 5,124 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 


டெங்கு தொற்று காரணமாக இதுவரையான காலப்பகுதியில் 49 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »