Our Feeds


Thursday, July 16, 2026

SHAHNI RAMEES

போதைப்பொருள் விநியோகம்: சர்வதேச பாடசாலை ஆசிரியையும் அவரது கணவரும் கைது!

 


கொழும்பில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றின்

ஆசிரியை மற்றும் அவரது கணவர் ஆகியோர் 2 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் தொகையுடன் மாதம்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 


கொழும்பு வடக்கு பிராந்திய புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் நடத்தப்பட்ட சோதனையின் போதே இந்த தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். 


இதன்போது, சந்தேகநபரான ஆண்டமிருந்து 1 கிலோ 6 கிராம் 'ஐஸ்' போதைப்பொருளும், பெண்ணிடமிருந்து 149 கிராம் 150 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 


மேலதிக விசாரணைகளின் போது, இவர்கள் 'மொதர மயூர' என்ற பிரபல போதைப்பொருள் கடத்தல்காரனின் கூட்டாளிகள் என்பது தெரியவந்துள்ளது. 


அத்துடன், இந்த தம்பதியினர் நீண்டகாலமாக இப்போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளமையும் விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது. 


இருப்பினும், சந்தேகநபரான பெண் பொலிஸ் விசாரணைகளின் போது, தான் தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் சட்டப் பட்டப்படிப்பு படித்து வருவதாகவும், அதற்கான கல்விச் செலவுகளை ஈடுகட்டும் நோக்கிலேயே இந்த போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார். 


விசாரணைகளின் பின்னர், சந்தேகநபரான பெண் மாளிகாகந்த நீதவான் நீதிமன்ற உத்தரவிவிற்கு அமைய 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 


அதேநேரம், சந்தேகநபரான ஆடவரிடம் நடத்தப்படும் விசாரணைகளின் பின்னர் அவர் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »