Our Feeds


Friday, July 3, 2026

SHAHNI RAMEES

டெங்கு அபாயம்: ஹோமாகம டிப்போவுக்கு 25,000 ரூபா அபராதம்!

 

ஹோமாகம பேருந்து டிப்போ வளாகத்தினுள் டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்கள் காணப்பட்டமை காரணமாக, அந்த டிப்போவுக்கு 25,000 ரூபா அபராதம் விதிக்குமாறு ஹோமாகம நீதவான் ரஜீந்ரா ஜயசூரிய இன்று (02) உத்தரவிட்டுள்ளார். 

ஹோமாகம சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பிடிபன பொதுச் சுகாதார பரிசோதகரினால் நீதவான் நீதிமன்றில் விபரங்கள் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னரே இந்த வழக்குத் தொடரப்பட்டிருந்தது. 

குறித்த பொதுச் சுகாதார பரிசோதகரினால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர், டிப்போ வளாகத்தை சுத்தம் செய்யுமாறு அறிவித்து நான்கு (04) தடவைகள் சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல்கள் (Red Notices) விடுக்கப்பட்டிருந்தமையும் நீதிமன்றில் தெரியவந்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »