Our Feeds


Wednesday, July 15, 2026

SHAHNI RAMEES

ஜெயலத் பண்டார திஸாநாயக்க பிணையில் விடுதலை!

 

நிதி மோசடி ஒன்றின் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவின் சகோதரரான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜெயலத் பண்டார திஸாநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

சந்தேக நபரான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜெயலத் பண்டார திஸாநாயக்க இன்று (15) நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தலா 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும், 50,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும் விடுவிக்க உத்தரவிடப்பட்டது. 

மேலும், சந்தேக நபருக்கு நீதிமன்றத்தினால் வெளிநாட்டு பயணத் தடையும் விதிக்கப்பட்டது. 

மதுபான அனுமதிப்பத்திரம் பெற்றுத் தருவதாகக் கூறி வீரகெட்டிய பகுதியைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து 27,500,000 ரூபாய் பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், அந்தப் பிரிவின் நிதி மற்றும் வர்த்தகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு சந்தேக நபருக்கு எதிராக விசாரணைகளைத் தொடங்கியிருந்தது


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »