ஹெட்போன் அல்லது இயர் போன் அணிந்து இசை கேட்டுக் கொண்டு வீதிகளில் நடந்து செல்லும் பாதசாரிகளுக்கு எதிராக எதிர்காலத்தில் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது எச்சரிக்கை மட்டுமே வழங்கப்பட்டு வருவதாகவும், வீதி விபத்துகளின் அபாயம் அதிகரித்துள்ளதால் இனி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வீதி விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் புதிய தொழில்நுட்ப கண்காணிப்பு முறைகளும் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
