திருகோணமலையில் முஸ்லிம்
பரீட்சார்த்திகள் ஹிஜாப் அணிந்திருந்தமைக்காக அவர்களின் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நிறுத்தி வைக்கப்பட்டமையானது, அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும் என இலங்கை மனித உரிமைகள் தீர்மானித்துள்ளது.இந்தக் வழக்கு, 2024 ஆம் ஆண்டு ஜனவரியில் திருகோணமலை புனித சூசையப்பர் தேசிய பாடசாலையில் நடைபெற்ற பரீட்சை தொடர்பானதாகும்.
பரீட்சைப் பெறுபேறுகள் 2024 மே 31 ஆம் திகதி வெளியிடப்பட்ட போதிலும், 70 முஸ்லிம் மாணவிகளின் பெறுபேறுகள் பரீட்சைத் திணைக்களத்தினால் நிறுத்தி வைக்கப்பட்டன.
பரீட்சைகளின் போது இலத்திரனியல் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்காக, பரீட்சார்த்திகளின் காதுகள் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும் என்ற பரீட்சை விதியை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
வெளிவாரி பரீட்சை அதிகாரி ஒருவர் இது குறித்து முறைப்பாடு செய்ததையடுத்தே பரீட்சைகள் திணைக்களம் இந்த நடவடிக்கையை எடுத்திருந்தது.
