Our Feeds


Saturday, August 8, 2026

SHAHNI RAMEES

சிறுவர்களின் கற்பனைக்கு சிறகூட்டும் “இளஞ்சிறகுகள்” – சிமாரா அலியின் சிறுவர் கதை நூல் ஆகஸ்ட் 15 வெளியீடு!

 



சிறுவர்களின் கற்பனைக்கு சிறகூட்டும் “இளஞ்சிறகுகள்” –

சிமாரா அலியின் சிறுவர் கதை நூல் வெளியீடு*


சிறுவர்களின் வாசிப்பு ஆர்வம், கற்பனைத்திறன் மற்றும் படைப்பாற்றலை வளர்க்கும் நோக்கில் எழுத்தாளர் *ஏ.ஆர்.எப். சிமாரா அலி (ஊதாப்பூ)* எழுதியுள்ள *“இளஞ்சிறகுகள்”* சிறுவர் கதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் *15 ஆகஸ்ட் 2026 சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு, கொழும்பு 10, **தபால் தலைமையக கேட்போர் கூடத்தில்* நடைபெறவுள்ளது.


அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற *சிறுவர் கதையாக்கப் போட்டியின் பரிசளிப்பு விழாவும்* இந்நிகழ்வுடன் இணைந்து நடைபெறவுள்ளது. நாடளாவிய ரீதியில் சிறுவர்களிடையே வாசிப்பு மற்றும் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்ட இப்போட்டியில் பங்கேற்ற சிறுவர்களில் திறமையானவர்கள் தெரிவு செய்யப்பட்டு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.


இந்நிகழ்வுக்கு **ஊடகவியலாளரும் பன்னூலாசிரியருமான அஷ்ரப் ஷிஹாப்தீன் தலைமை வகிக்கவுள்ளார்.


பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்.  கௌரவ அதிதியாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கலந்து கொள்ளவுள்ளார். விசேட அதிதியாக பிரதமர் அலுவலகத்தின் மேலதிக செயலாளர் ஏ.பி.எம். அஷ்ரப் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்.


விழா நிகழ்வில் வரவேற்புப் பாடலை கதை நேரம் இஸ்zஸா மரியம் இஸ்பஹான் படவுள்ளார்.


“இளஞ்சிறகுகள்” சிறுவர் கதை நூலின் நயவுரையை கவிஞ்ர் நாச்சியா தீவு பர்வீன் அவர்களும் கொழும்பு டி.எஸ் கல்லுரி ஆசிரியை ஷஹீகா பஹ்மியும் வழங்கவுள்ளனர்.


நூல் வெளியீட்டை முஹம்மட் நிலாம்தீன் மேற்கொள்ளவுள்ளதுடன், நூலின் முதற்பிரதி உவைஸ் மொஹிதீன் அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.


சிமாரா அலியின் எழுத்துப் பயணத்தில் “இளஞ்சிறகுகள்”ஒரு முக்கியமான படைப்பாக அமைந்துள்ளதுடன், அவரது  முதல் நூலாக “கரையைத் தழுவும் அலைகள்” கவிதைத் தொகுப்பு ஏற்கனவே அவரது இலக்கியப் பயணத்திற்கு அடித்தளமிட்டுள்ளது. கவிதையிலிருந்து சிறுவர் இலக்கியத்தை நோக்கிய அவரது இந்தப் பயணம், குழந்தைகளின் கற்பனை உலகத்தையும் படைப்பாற்றலையும் வளப்படுத்தும் முயற்சியாக அமைகிறது.


குழந்தைகளின் கைகளில் ஒரு நல்ல நூலை வழங்குவது அவர்களின் எதிர்கால சிந்தனை உலகிற்கு விதையிடுவதாகும். அந்த வகையில், “இளஞ்சிறகுகள்”சிறுவர் கதை நூல் வெளியீடும், அகில இலங்கை சிறுவர் கதையாக்கப் போட்டியின் பரிசளிப்பு விழாவும் சிறுவர் இலக்கியத்திற்கும் புதிய தலைமுறை படைப்பாளிகளுக்கும் ஊக்கமளிக்கும் முக்கிய நிகழ்வாக அமையவுள்ளது.



நிகழ்வு விபரம்


நூல்:இளஞ்சிறகுகள் – சிறுவர் கதை நூல்

நூலாசிரியர்:ஏ.ஆர்.எப். சிமாரா அலி (ஊதாப்பூ)

முதல் நூல்:கரையைத் தழுவும் அலைகள்– கவிதைத் தொகுப்பு

திகதி:15 ஆகஸ்ட் 2026, சனிக்கிழமை

நேரம்:பிற்பகல் 3.00 மணி

இடம்:தபால் தலைமையக கேட்போர் கூடம், கொழும்பு 10

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »