இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையேயான எரிசக்தித் துறை இருதரப்பு ஒத்துழைப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
டெல்லியில் நடைபெற்ற இவ் ஆய்வு கூட்டத்தில், மத்திய மின்சாரம் மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால் இந்தியக் குழுவிற்கு தலைமை தாங்கினார், அதேவேளை இலங்கைக் குழுவிற்குத் துறைமுகங்கள் மற்றும் விமான போக்குவரத்து மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தலைமை தாங்கினார்.
பிராந்தியத்தில் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்தும் மற்றும் தூய்மையான எரிசக்தி மாற்றத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில், எல்லை தாண்டிய மின்சார வர்த்தகம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பரிமாற்றக் கட்டமைப்பு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் ஒத்துழைப்பை ஆழமாக்குவதற்கான வாய்ப்புகள் குறித்து இதன்போது விவாதிக்கப்பட்டுள்ளது.
பொது - தனியார் கூட்டாண்மை (PPP) மாதிரியாக கட்டண அடிப்படையிலான போட்டி ஏல (TBCB) கட்டமைப்பு மூலம் பரிமாற்ற அமைப்பு மேம்பாட்டில் தனது அனுபவத்தையும் இந்தியத் தரப்பு பகிர்ந்து கொண்டது.
நிலையான வளர்ச்சி மற்றும் பிராந்திய எரிசக்தி பாதுகாப்புக்காக மின் துறைசார்ந்த இருதரப்பு வழிமுறைகளின் கீழ் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை இரு தரப்பினரும் ஆய்வு செய்ததுடன், ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினர்.
Saturday, August 8, 2026
இந்தியா-இலங்கை எரிசக்தித் துறை ஒத்துழைப்பு குறித்து ஆய்வு!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
