அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி நேற்று (19) வரை உயர்நீதிமன்றத்தில் 09 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
நேற்றைய தினம் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில உள்ளிட்ட குழுவினரால் உயர்நீதிமன்றத்தில் மேலும் சில மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
குறிப்பிட்ட சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி நேற்றுமுன்தினம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியான சாந்த ஜயதிலக உள்ளிட்ட குழுவினரால் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலத்தின் மூலம் நீதித்துறையின் சுயாதீனத்துக்கு தாக்கம் ஏற்படுவதுடன், அதன் ஊடாக அரசியலமைப்பின் 03ஆவது உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ள மக்களின் பரமாதிபத்தியமும் மீறப்படுவதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதற்கமைய, குறித்த சட்டமூலத்தை சர்வஜன வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்ற வேண்டும் என தீர்ப்பளிக்குமாறு மனுதாரர்கள் தமது மனுக்கள் ஊடாக கோரியுள்ளனர்.
