நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை திருத்துவது உள்ளிட்ட பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடப்பட்டுள்ளது.
இச்சட்டமூலத்தில் உள்ள முக்கிய சாரம்சங்கள் வருமாறு:
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது மாற்றம்:
அரசியலமைப்பின் 107(5) உறுப்புரையைத் திருத்துவதன் மூலம், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 65 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதியின் ஓய்வுக் காலம்:
பிரதம நீதியரசர் (தலைமை நீதிபதி) 67 வயதை அடையும் நாளில் அல்லது அவர் பிரதம நீதியரசராகப் பதவியேற்ற நாளில் இருந்து 6 ஆண்டுகள் பூர்த்தியாகும் நாளில் - இதில் எது முன்னதாக வருகிறதோ அந்நாளில் ஓய்வுபெற வேண்டும்.
அரசியலமைப்பு உறுப்புரை 137 இல் திருத்தம்:
அரசியலமைப்பின் 137வது உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ள "12 பேருக்கு மிகாமல்" எனும் சொல்லாடலுக்குப் பதிலாக "24 பேருக்கு மிகாமல்" எனத் திருத்தம் செய்யப்படுகிறது.
