Our Feeds


Friday, August 7, 2026

ShortNews

யாழ்.சிறைச்சாலையிலும் விசேட பாதுகாப்பு நடவடிக்கை!


நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளில் மோதல் மற்றும் அமைதியின்மை சம்பவங்கள் பதிவாகியுள்ளதையடுத்து, யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலும் இன்று (07) விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் பாதுகாப்பு நிலைமையை ஆராயும் நோக்கில் இராணுவம், பொலிஸார் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் இணைந்து அவசர ஆலோசனைக் கூட்டமொன்றை நடத்தியுள்ளனர்.

குறிப்பாக, யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் பாதுகாப்பை வலுப்படுத்துவது, கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது மற்றும் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் தடுப்பது தொடர்பில் இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »