22-ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்வதற்கான காலவகாசம் இன்றுடன் (31) நிறைவடைகின்றது.
நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவால் கடந்த 18 ஆம் திகதி 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உட்பட பல சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் இச்சட்ட மூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக இதுவரை 27 மனுக்களும், அதற்கு ஆதரவாக 3 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
