Our Feeds


Saturday, August 29, 2026

Zameera

236 சந்தேகநபர்களுக்கு எதிராக இன்டர்போல் சிவப்பு அறிவிப்பு


 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு நாட்டை விட்டு தப்பிச் சென்ற 236 பேருக்கு இன்டர்போல் மூலம் சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

அவர்களில் 96 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் பிரிவு குறிப்பிட்டுள்ளது

மேலும், 2025 பெப்ரவரி முதல் இதுவரை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட 37 சந்தேகநபர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இன்டர்போலின் உதவியுடன் இதுவரை 42 சந்தேகநபர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »