Our Feeds


Saturday, August 29, 2026

ShortNews

அமெரிக்க ராணுவ கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் வரவுசெலவுத் திட்ட இலக்குகளை உறுதிசெய்த ஈரான்!


கடல்சார் போக்குவரத்து தடைகள் எதுவாக இருப்பினும், தமது வரவுசெலவுத் திட்டத்திற்கு (Budget) தேவையான நிதியைத் திரட்டுவதற்குப் போதுமான அளவு எண்ணெய் விற்பனைக்குக் கிடைப்பதாக ஈரானின் ஃபார்ஸ் (Fars) செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

பெட்ரோலிய அமைச்சகத்தின் தரவுகளின்படி, நடப்பு ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் வரவுசெலவுத் திட்டத்திற்காக எதிர்பார்க்கப்பட்ட எண்ணெய் வருவாயில் 99 சதவீதம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆரம்ப மாதங்களில் எண்ணெய் மூலம் ஈட்டப்பட்ட 7.5 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான அந்நியச் செலாவணி வருவாயை பெட்ரோலிய அமைச்சகம் ஏற்கனவே மத்திய வங்கியிடம் ஒப்படைத்துள்ளதாகவும், இது எதிர்வரும் ஜனவரி மாதம் வரையிலான அரசாங்கத்தின் அந்நியச் செலாவணிச் செலவுகளை ஈடுசெய்யும் என்றும் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »