Our Feeds


Wednesday, August 12, 2026

Zameera

பலூசிஸ்தானில் வான்வழித் தாக்குதல் – 30க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு


 பலூசிஸ்தான் மாகாணத்தில் பாகிஸ்தான் இராணுவம் மேற்கொண்டதாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதல்களில் 30க்கும் மேற்பட்ட உள்ளூர்வாசிகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.




சுராப் மாவட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்தத் தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




மேலும், குடியிருப்புப் பகுதிகளில் ஆளில்லா விமானங்கள் மற்றும் உலங்குவானூர்திகள் மூலம் பாகிஸ்தான் இராணுவத்தினர் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.




பலூசிஸ்தான் முழுவதும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும், தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய வைத்திய சிகிச்சை வழங்குவதற்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் பலூச் மனித உரிமை ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.




பலூசிஸ்தானில் சுதந்திரம் கோரும் ஆயுதக் குழுக்களுக்கும் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் நீண்டகாலமாக மோதல்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில், இந்தத் தாக்குதல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »