செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை 56 நாட்களுக்கு முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில், 53 ஆவது நாளான இன்றைய தினம் 8 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 10 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில், செம்மணியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட 107 நாள் அகழ்வுப் பணிகளின் போது, மொத்தமாக 562 எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 557 எலும்புக்கூடுகள் இதுவரை அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
