Our Feeds


Monday, August 24, 2026

Zameera

நாட்டில் 94,037 டெங்கு நோயாளர்கள் அடையாளம்


 இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 94,037 ஆக அதிகரித்துள்ளது. 


இந்த ஆண்டில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் ஜூலை மாதத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 29,962 ஆகும். 


அத்துடன், ஜூன் மாதத்தில் 21,533 நோயாளர்களும், ஒகஸ்ட் மாதத்தில் இதுவரை 8,701 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர். 


ஜனவரி மாதத்தில் 7,866 பேரும், பெப்ரவரி மாதத்தில் 5,721 பேரும், மார்ச் மாதத்தில் 6,013 பேரும், ஏப்ரல் மாதத்தில் 5,651 பேரும், மே மாதத்தில் 8,590 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர். 


நாட்டின் மொத்த டெங்கு நோயாளர்களில் 52.93 சதவீதமானோர், அதாவது 49,771 பேர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர். 


இதற்கு மேலதிகமாக, தென் மாகாணத்தில் 13,763 நோயாளர்களும், மத்திய மாகாணத்தில் 8,519 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 


மாவட்ட மட்டத்தில் நோக்கும் போது, அதிகளவான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர். அந்த எண்ணிக்கை 20,034 ஆகும். 


கொழும்பு மாவட்டத்தில் 18,652 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் மாத்திரம் 3,787 நோயாளர்கள் இனங் காணப்பட்டுள்ளனர். 


மேலும், கண்டி மாவட்டத்தில் 6,818 நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 6,093 பேரும், காலி மாவட்டத்தில் 6,079 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 5,160 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 5,003 பேரும், கேகாலை மாவட்டத்தில் 2,713 பேரும், குருநாகல் மாவட்டத்தில் 2,651 பேரும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 2,510 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர். 


நாடு முழுவதும் அதிக அபாயம் உள்ள 76 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 


டெங்கு நுளம்பு பெருகும் இடங்களைத் தொடர்ச்சியாகச் சுத்தம் செய்து அழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், காய்ச்சல் நிலை காணப்பட்டால் தகுதியான மருத்துவரிடம் தாமதமின்றி சிகிச்சை பெறுமாறும் சுகாதாரப் பிரிவினர் பொதுமக்களை அறிவுறுத்துகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »