Our Feeds


Sunday, August 2, 2026

Zameera

புதிய இராணுவத் தளபதி தமது கடமைகளை பொறுப்பேற்றார்


 26ஆவது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நேற்று (01) தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். 


அதற்கு முன்னர் அவர் பத்தரமுல்ல ரணவிரு நினைவிடத்திற்கு சென்று மலரஞ்சலி செலுத்தினார். 


அதனைத் தொடர்ந்து இராணுவ தலைமையகத்தில் புதிய இராணுவத் தளபதிக்கு இராணுவ ஆச்சார முறைப்படி அணிவகுப்பு மரியாதை வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், பின்னர் சர்வமத வழிபாடுகளுக்கு மத்தியில் அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றார். 


லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன, 1990 ஜூலை 14 ஆம் திகதி கடேட் அதிகாரியாக இலங்கை இராணுவத்தின் வழக்கமான படையில் இணைந்து கொண்டார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 


தியத்தலாவை இலங்கை இராணுவக் கல்லூரியின் 34 ஆவது பாடநெறியின் கீழ் அடிப்படை இராணுவப் பயிற்சியை முடித்த பின்னர், 1992 ஜூன் 06 ஆம் திகதி இரண்டாம் லெப்டினன்ட்டாக அதிகாரமளிக்கப்பட்டு, இலங்கை பீரங்கிப் படையில் இணைக்கப்பட்டார். 


மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த தமது இராணுவ வாழ்க்கையில், அவர் பல்வேறு கட்டளை, பிரதானி உள்ளிட்ட பல பதவிகளை வகித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »