Our Feeds


Monday, August 24, 2026

SHAHNI RAMEES

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு!

 


பொலிஸ் அதிகாரிகளுக்குக் கொலை மிரட்டல் விடுத்து,

அவர்கள் மீது தாக்குதல் நடத்தி காயப்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி இன்று (24) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 



தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக, தனது சட்டத்தரணிகள் ஊடாக தாக்கல் செய்த பிணை மனு இன்று மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 


இதன்போதான விசாரணைகளைத் தொடர்ந்து, சமிந்த விஜேசிறியை 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பிணையிலும்  தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »