எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்தார்.
பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாண மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கண்டறிவதே இச்சந்திப்பின் பிரதான நோக்கம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியில் நான் நேரடியாக தலையீடு செய்து வடக்கு, கிழக்கு மாகாண மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் தெரிவித்தார்.
குறித்த பிரச்சினைகளைக் கண்டறிந்து, அவற்றுக்கு எதிர்க்கட்சி என்ற ரீதியில் அவசியமான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதில் தலையீடு செய்வதும், இச்சமூகப் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வருவதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
Monday, August 10, 2026
வடக்கு - கிழக்கு மக்களுக்கு எதிர்க்கட்சித் தலைவரின் வாக்குறுதி!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
